புதுடெல்லி:

நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, நாடு முழுவதும் 3 லட்சம் துணை ராணுவத்தினரும், 20 லட்சம் மாநில போலீஸாரும் பணியில் ஈடுபட்டனர்.


இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது,36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மக்களவை தேர்தல் பாதுகாப்புக்காக 3 லட்சம் துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாநிலங்களில் இருந்து 20 லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தியாவில் போலீஸார் 21 லட்சம் பேரும், துணை ராணுவத்தினர் 10 லட்சம் பேரும் உள்ளனர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பல சமயங்களில் கூடுதல் படைகளை அனுப்ப தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்ளும்.

அந்த சமயத்தில் குறுகிய காலமாக இருந்தாலும், விரைந்து படைகளை அனுப்பி வைத்துள்ளோம் என்றனர்.