கவுகாத்தி:

மிசோரம் மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த  30ஆயிரம் ‘புரு’ அகதிகளுக்கு திரிபுராவில் மறுவாழ்வு அளிக்கும் வகையிலான  ஒப்பந்தம் மத்தியஅரசுக்கும், மாநில அரசு மற்றும், புரு அகதிகள் தரப்பிலும் கையெழுத்தாகி உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக  பிபலப் குமார் இருந்து வருகிறார். இங்கிருந்து திரிபுராக மாநிலத்திற்கு குடிபெயர்ந்துள்ள  30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரு (bru) அகதிகளுக்கு  புணர்வாழ்வு அளிக்கப்படும் என ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது புரு அகதிகளுக்கு, 40க்கு 30  அளவிலான (1200 சதுர அடி)  நிலமும் 4 லட்ச ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை மற்றும்,  இரண்டு ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருட்கள், ரூ. 5 ஆயிரம்  மாத உதவித்தொகை வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்காக ரூ. 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான   ஒப்பந்தம் திரிபுரா முதலமைச்சர் பிபலப் குமார் மற்றும் மீசோரம் முதலமைச்சர் ஜோராம்தங்கா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. புரூ அகதிகள் திரிபுராவில் பலகாலமாக அடைக்கலம் இருந்துவரும் நிலையில், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.