ராஜ்பூர்,
சத்திஸ்கரில் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில்,  ஒரே அறையில் சுமார் 40க்கும் மேற்படட மாடுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து பவனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 மாடுகள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், சரண்ஷ் மிட்டர்,  சத்தீஸ்கரில் பாரம்பரிய விவசாய முறைகளை புதுப்பிக்கவும், கரீஃப் பயிர்களை மேய்ச்சலிலிருந்து காப்பாற்றவும் கடந்த ஜூன் மாதம் சத்தீஸ்கர் அரசு மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் “ரோகா-சேக்கா அபியான்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் கரீஃப் பயிர்களைக் காப்பாற்ற மேய்ச்சலுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. திறந்தவெளி மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால்,   கால்நடை உரிமையாளர்களின் சிரமங்களை போக்க அரசாங்கம் சூராஜி காவ்ன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 5,000 கால்நடை கொட்டகைகளை கட்டி வருகிறது. அங்கு கால்நடைகளை அடைத்து வைக்க அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில்தான்  பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்த துர்சம்பவம் நிகழ்ந்துள்ளது,  கிரமத்தின் தலைவர்  அதிக அளவிலான  மாடுகளை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக  தெரிவிகிறத.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 மாடுகள்  உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர்கள் குழு மீட்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். உயிரிழந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு  கூறினார்.