சென்னை:

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தமிழகம் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 91.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 90.14 சதவீதம், மாணவிகள் 92.45 சதவீதம் பேர் தேர்வாகி உள்ளனர்.

இந்த தேர்வை எழுதிய சென்னை பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில்  50% மாணவ மாணவிகள்  80%க்கு மேல் மார்க் ஸ்கோர் செய்துள்ளது தெரிய வந்துள்ளது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியயமான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம்  21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 2 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ 88,000 பேர் தேர்வெழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகலில் வெளியானது.  தேர்வு முடிவில், 13 பேர் 500-க்கு 499 மதிப்பெண்ணும், 25 பேர் 498 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். கோவை வித்யா நிகேதன் பள்ளி மாணவி வி.காவ்யா வர்ஷினி உள்பட 59 பேர் 497 மதிப்பெண் எடுத்து  சாதனை படைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த தேர்ச்சியில் திருவனந்தபுரம் மண்டலம் 99.85 சதவீத தேர்ச்சி பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை மண்டலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக 2-ம் இடத்தை பிடித்துள்ளது.  சுமார் 50 சதவிகித மாணவ மாணவிகள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக, அதாவது 400க்கும் அதிகமான  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறிப்பிக சயின்ஸ்,  சோசியல் சயின்ஸ் பாடங்களில் அதிக அளவிலான பேர் 100க்கு 99 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த தேர்வில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள சென்னை விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி, பி.கவிஷா, 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தான் 480 மதிப்பெண் பெறுவேன் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், 496 மதிப்பெண் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், மேற்படிப்பில் வணிகவியல் மற்றும் கணக்கு எடுத்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுபோல சென்னையில் முதல் மதிப்பெண்ணான 500க்கும் 496 மதிப்பெண் எடுத்துள்ள மேல்அயனாம்பாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவியான தீப்ஷிகா, இந்த ஆண்டு தேர்வுகள் எளிமையாக இருந்தாகவும், எம்.பி.பிஎஸ் படிக்க விரும்புவதால் பயோ மேக்ஸ் எடுத்து பிளஸ்1 படிக்க இருப்பதாக கூறி உள்ளார்.

இந்த ஆண்டு வெளியாகி உள்ள  தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்து சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்களும் Over 50% CBSE students in Chennai bag 80% in Class Xமகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.