Random image

குண்டாக உள்ள கடற்படை பாதுகாவலர்களுக்கு மதுபானம் கிடையாது

டில்லி

ளவுக்கு மீறிய எடையுடன் குண்டாக உள்ள கடற்படை பாதுகாப்பு குறைந்த விலையின் மதுபானம் வழங்கப்பட மாட்டாது என அதிகாரி அறிவித்துள்ளார்.

ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மலிவு விலையில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது.   இதனால் ராணுவத்தினர் அதிலும் குறிப்பாக கடற்படை காவலர்கள் ஆகியோர் அதிக அளவில் மது அருந்துவதாக சொல்லப்படுகிறது.   அதனால் பலருடைய உடல் நிலை சீர் கெடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடல் பாதுகாப்புப் படையினரின் வடமேற்கு பகுதி தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ”உடல் பருமனான மற்றும் அதிக எடையுள்ள கடற்படை காவலர்களுக்கு இனி மலிவு விலையில் மதுபானம் வழங்கப்பட மாட்டாது.   மதுபானம் உடல் பருமனுக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

உடல் பருமனையும் அதிக எடையையும் குறைக்க விரும்புவர்களுக்கு மதுபானம் மிகவும் எதிரான ஒன்றாகும்.    அத்துடன் அவ்வாறு இருப்பதும் ஒரு வகை உடல் நோயாகும்.   அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது மது பானம் தவிர்க்க வேண்டிய ஒன்று என மருத்துவர்கள் ஆலோசனை அளிப்பது வழக்கமான ஒன்றாகும்.

அத்துடன் கடற்படை காவலர்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.   அவ்வாறு ஆரோக்கியம் இல்லாதவர்களால் கடற்பாதுகாப்பு பணிகளை சரிவர செய்ய முடியாது.   அதனால் அவர்களுக்கு மதுபானம் மலிவு விலையில் வழங்குவது தடை செய்யப் படுகிறது” என தெரிவித்துள்ளார்.