உலகளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை: 17 ஆயிரத்தை கடந்தது

டெல்லி: உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400703 ஆக இருக்கிறது.

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 180க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது.

கொரோனா வைரசால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 703 ஆக இருக்கிறது.

அவர்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 750 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 501 பேர் இன்னும் பாதிப்பில் இருக்கின்றனர்.

அவர்களில் லேசான வைரஸ் தாக்குதலுடன் 2 லட்சத்து 67ஆயிரத்து 143 பேர் உள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 358 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.