சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா… 13/05/2020 மண்டலவாரி பட்டியல்…

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (13/05/2020) பாதிப்பு விவரம்.

தமிழகத்தில்நேற்று புதிதாக 716 பேருக்கு  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 8,718 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையை பொருத்தவரை,  புதிதாக 510 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் மொத்தம் 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4012 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 510

இதுவரை, கொரோனா தொற்றில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 814 பேர்

பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் (5வது மண்டலம்) 828 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில்  796  பேரும் திரு.வி.நகரில் 622 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.