சென்னை:
மிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை உருவாகி உள்ளது.   கொரோனா பாதிப்பு காரணமாக 357 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.  சென்னையில் உள்ள 15 மண்டலங்களி லும் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. தொற்று  பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, ஒலி ஒளி மூலம் விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது. இருந்தாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் கொரோனாதொற்று என்ன நிலவரம் என்பது குறித்து மண்டலம் வாரியாக பட்டிலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1652 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதியாக கேஸ்களின் எண்ணிக்கை 2008 ஆக உள்ளது. அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 327 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையில் அதிகப்பட்சமாக திருவிகநகர் மண்டலத்தில்  395 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில்   321 பேருக்கும்,  அண்ணாநகர் மண்டலத்தில், கோடம்பாக்கம், தேனம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.