சென்னை:

றைமுக தேர்தல் மசோதா மற்றும்  குடிநீர் மேல்நிலைத்தொட்டி தொடர்பான கேள்விகளுக்கு தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்தார்.

உறுப்பினரின் கேள்விக்கு பதில் தெரிவித்த அமைச்சர்,  குடிநீர் வடிகால்வாய் வாரியம் மூலமாக கடந்த 8 ஆண்டுகளில் 11140 குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

பின்னர்,  மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது.

அந்த மசோதாவில்,  நேரடி தேர்தல் முறையில், மேயர்கள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களாக வும் பெரும்பாலான உறுப்பினர்கள் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும் போது மன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற முடிவதில்லை என கூறப்பட்டு உள்ளது. மேலும்,  தேர்தல் மறைமுகமாக நடத்தப்பட்டால், மேயர்கள் உள்ளிட்டோரின் நிலைத்தன்மை மற்றும் கூட்டுப்பொறுப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவுக்கு  தொடக்க நிலையிலேயே தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதத்துக்குப் பின் மசோதா நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினரின் எல்இடி விளக்கு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்ச்ர,  உள்ளாட்சி அமைப்புகளில் தெரு விளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றியதன் மூலம் மின்கட்டணம் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தெருவிளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றியதன் மூலம் மின் கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.400 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றார்.