ஆரவ்வுடன் ஓவியா – நெல்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆரவை விரட்டி விரட்டி காதலித்தார் ஓவியா. அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்தார். இதனால் அழுது புலம்பினார் ஓவியா.

குழந்தை ஓவியா

இந்த நிலையில்  “ஓவியா யாரையும் காதலிக்கவில்லை” என்று அவரது அப்பா நெல்சன் தெரிவித்துள்ளார்.

ஓவியாவின் சொந்த ஊர் கேரளாவில் திருச்சூர் அருகே உள்ள புதுக்காடு. இங்கு ஓவியாவின் அப்பா நெல்சன், பாட்டி மேரி ஆகியோர் வசிக்கிறார்கள். தாயார்  இரு வருடங்களுக்கு முன் புற்றுநோயால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.

தாயாருடன் ஓவியா

இந்த நிலையில்  சமீபத்தில் வெளியான வீடியோ பேட்டி ஒன்றில் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து, ஓவியாவின் அப்பா நெல்சன்  தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்:

“நான் மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பல சரக்கு வியாபாரம் செய்து வந்தேன். ஹெலன் (ஓவியாவின் உண்மையான பெயர்) அரசுப்பள்ளியில்தான் படிக்க வைத்தேன்.

ஹெலன் மிகவும் புத்திசாலி. மூன்று வயதில் இருந்தே தனக்கான தேவைகளை அவளே தீர்மானித்தாள். அந்த அளவுக்கு அவளை சுதந்திரமாக வளர்த்தேன். அவளை நான் ஒரு முறைகூட அடித்ததில்லை” என்கிறார் நெல்சன்.

நெல்சன்

“என் மகளை ஆங்கில வழியில் படிக்கை வைக்கவில்லை. மலையாளத்தில்தான் படித்தாள். ஹெலனுக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாது. அவள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி என்னிடம் ஹெலன் சொன்னாள். நூறு  நாள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றாள். முதலில் எனக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியை நடத்துவது கமல் ஹாஸன் என்றதும் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் அவள் அழுவதைப் பார்த்ததும், எப்படியாவது அவளை சந்தித்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என நினைத்தேன்” என்றார்.

ஓவியா – ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலிக்க ஓவியா துடிப்பதாக காட்டப்படுகிறது.  இது குறித்து நெல்சன், “என் மகள் யாரையும் காதலிக்கவில்லை. குறிப்பாக திடீரென ஒருவரைப் பார்த்து காதலிப்பது பிறகு விலகுவது என்பதெல்லாம் ஓவியா வாழ்க்கையில் நடக்கவே நடக்காது. ஏனென்றால் அவள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவள். தன்னம்பிக்கை மிக்கவள்.

அந்த நிகழ்ச்சியில் காதலிக்க உருகுவதாக காட்டப்படுவதை நம்ப முடியவில்லை.  அவர் தன்னம்பிக்கை மிக்கவள்.  தவிர எந்த வொரு விசயத்தையும் நேருக்கு நேராக சந்திப்பாள். அவள் காதலுக்காக உருகுகிறாள்.. அழுகிறாள் என்பதை நம்பவே முடியவில்லை. அப்படி இருக்காது!” என்கிறார் நெல்சன்.