பாபுராஜ் இயக்கும் “பிளாக் காபி’….!

“களவாணி” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், ஓவியா அளவுக்குப் பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றாலும் கூட, தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. களவானி 2 படத்திற்கு பிறகு எந்த ஒரு பெரிய படத்திலும் அவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை .

இந்நிலையில் மீண்டும் தனது தாய் மொழியான மலையாளப் படங்களில் நடிக்க முடிவுசெய்துள்ளார். தற்போது பாபுராஜ் இயக்கும் “பிளாக் காபி’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.