பிக் பாஸ் சீசன் 2 வில் ஓவியா

சென்னை

பிக் பாஸ் சீசன் 2 வில் தாம் கலந்துக் கொள்ளப் போவதாக ஓவியா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி ஒளிபரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா.   அவருக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட காரணங்களினால் அவராகவே வெளியேறினார்.   ஆயினும் மக்கள் அவரை மறக்கவில்லை.   தற்போது பிக் பாஸ் சீசன் 2 நடைபெற்று வருகிறது.   இது முடியும் தருவாயில் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 17 பேருடன் தொடங்கி தற்போது இறுதி வாரத்தில் உள்ளது.   இந்த நிகழ்ச்சியின் கடைசி தினத்தன்று டைட்டில் வின்னர் யார் என தெரிய வரும்.   கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நால்வர் உள்ளனர்.

இந்த சீசன் 2 ல் வெளியேறியவர்களும் முந்தைய சீசன் பங்கேற்றவர்களும் இந்த பிக் பாஸ் வீட்டுக்கு வந்து செல்கின்றனர்.    முந்தைய சீசனில் மனதை கவர்ந்த ஓவியா ஏற்கனவே இந்த வீட்டுக்குள் வந்த போது தானும் ஒரு போட்டியாளர் என அனைவரையும் கலாய்த்தார்

தற்போது ஓவியாவிடம் அவருடைய டிவிட்டரில் ஒரு ரசிகர், ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பார்க்க வாய்ப்பு உள்ளதா என கேட்டிருந்தார்.  அதற்கு ஓவியா ”ஆமாம்,   பொறுத்திருந்து பாருங்கள்” என பதில் அளித்துள்ளார்.   இது அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி