மீண்டும் ஒவியா : பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை

விஜய் டிவி வழங்கும் பிக் பாஸ் 2 ல் ஓவியா பங்கேற்பார் என விளம்பரம் ஒன்றை விஜய் டிவி வழங்கி உள்ளது.

விஜய் டிவி வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துக் கொண்டார்.   அவருக்கு அப்போது ரசிகர்களின் ஆதரவு எக்கச்சக்கமாக இருந்தது.  அவருக்கு ஆதரவாக சமூக வலைத் தளங்களில் ஓவியா ஆர்மி என அவருடைய ரசிகர்கள் ஆரம்பித்தனர்.

தற்போது பிக் பாஸ் 2 இன்று தொடங்க உள்ளது.    இதில் யார் கலந்துக் கொள்வார்கள் என பலரும் ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.  அதில் ஒரு சிலர் மறுத்துள்ளனர்.   ஒரு சிலர் ஒன்றும் கூறவில்லை.

இந்நிலையில் இன்று விஜய் டிவி ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.   அந்த விளம்பரத்தில் கமலஹாசன் ஓவியாவை  போட்டியாளராக அறிமுகப்படுத்துகிறார்.  ஓவியா, ”எப்படி இருக்கீங்க எல்லோரும்?” என கேட்கிறார்.  ரசிகர்கள் சந்தோஷத்துடன் கோஷம் எழுப்புகின்றனர்.  கமல்ஹாசன் “இதெல்லாம் விட்டுட்டு இடையில் போனீர்களே. பரவாயில்லை, இப்போது வந்துள்ளீர்கள்” எனக்கூறி ஓவியாவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்.

இந்த விளம்பரத்தின் மூலம் ஓவியா மீண்டும் பங்கேற்கிறார் என ரசிகர்கள் கொண்ட்டாட்டத்தில் உள்ளனர்.