ரசிகர்களிடையே கவனம் பெற்று வரும் ஓவியாவின் காதல் பதிவு….!

களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ்பெற்றவர் ஓவியா.

தனது வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த ஓவியா, ஆரவ்வை காதலிப்பதாக நிகழ்ச்சியிலேயே தெரிவித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்த ஆரவ் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஆரவ், ‘ஜோஷ்வா: இமைபோல் காக்க’ படத்தின் ஹீரோயின் ராஹேவை 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘லவ்’என தலைப்பிட்டு ஆண் ஒருவரின் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இவர் தான் காதலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் ஓவியாவின் பதிவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.