கமல் படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்ட ஓவியா!

“பாவிகளா.. இதையும் நியீஸ் ஆக்கிட்டீங்களா.. உங்கள உள்ள தள்ளணும்யா!”

ப்போது “பிக்பாஸ்” ஓவியாவின் தாத்தா, பாட்டி பற்றி எல்லாம் பூர்வீகம் அறிந்து தகவல் பதிவது ஒரு ட்ரண்ட் ஆகவே மாறிவிட்டது.

நாம மட்டும் சும்மா இருக்க முடியுமா…

ஓவியா பற்றி ஒரு ப்ளாஷ்பேக்:

அவர் நடித்த “களவானி” திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நேரம். இயக்குநர் கே.எஸ். ரவிக்கமார் அழைத்து, “கமல்கூட ஒரு படம்.. பண்றியா” என்று கேட்க, ஓவியாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

“மன்மதன் அம்பு படத்தில் கமல் சாருடன் நடித்திருக்கப்போதிறேன் தெரியுமா…” எல்லோரிடமும் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் கமலுக்கு ஜோடி இவர் இல்லை. மாதவனை காதலிக்கும் முறைப்பெண் வேடம்தான்.

ஆனாலும் கமல் படத்தில் நடிப்பதை பெருமையாக நினைத்தார் ஓவியா.

ஆனால் படம் வெளியானதும் அவரது உற்சாகம் புஸ் ஆனது.

ஓவியா – மாதவன் சம்பந்தப்பட்ட பல காட்சகள் வெட்டப்பட்டிருந்தன. அவர் நடித்த மிகச்சில காட்சிகள்தான் திரையில் வந்தன. படம் பார்த்த ரசிகர்களுக்கு ஓவியா வந்த காட்சிகளே நினைவில் இல்லை.

இதனால் ஓவியா ரொம்பவே நொந்து போனார். அவர்தான் வெளிப்படையாக பேசுவபவர் ஆயிற்றே..

“கமல் படம் என்பதால் துணை கதாபாத்திரம் என்றாலும் ஒப்புக்கொண்டன். அதே நேரம் நிறைய காட்சிகள் இருப்பதாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சொன்னார். அதே போல நிறைய எடுத்தார்கள். ஆனால் எடிட்டிங்கில் எல்லாவற்றையும் வெட்டிவிட்டார்கள்.  படத்தில் இரண்டு காட்சிகளில் வருகிறேன். அதுவும் வேலைக்காரி மாதிரியான வேடத்தில்.

இது மிகவும் வருத்தம் அளித்தது. அட்லீஸ்ட் கமலுடன் இருப்பது போல ஒரு காட்சியில் வந்திருந்தாலாவது கொஞ்சம் கவுரவமாக இருந்திருக்கும். மன்மதன் அம்பு மனசை நோகடித்ததுவிட்டது” என்ற ஓவியா, “இனி பிரபல நடிகர், இயக்குநர் படம் என்றாலும் கேரக்டர் தெரியாமல் ஒப்புக் கொள்ளமாட்டேன்” என்று வருத்தத்துடன் கூறினார்.

ஓகே.. வாசகர்களே.. ஓவியா பற்றிய வரலாற்றுத்தகவல் ஒன்றை தெரிந்துகொண்டீர்கள்.. மகிழ்ச்சிதானே!