டிஆர்பிக்காக தற்கொலை செய்து கொள்ளும் வரை சித்திரவதை செய்யவேண்டாம் : ஓவியா

‘பிக் பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் எல்லாம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா.

அப்போது அந்தப் பதிவுக்கு “ஆம். தடை செய்ய வேண்டும்” என்று ஒருவர் பதிலளித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா “அவர்கள் போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.