ஓவியா நடிக்கும் புதிய  தமிழ்ப்படம்

 

ஓவியா

விஞர், நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர் என்று பன்முக ஆளுமை கொண்டவர் இ.வி. கணேஷ்பாபு.

எடிட்டர் லெனின் இயக்கிய ‘ஊருக்கு நூறுபேர்’, அம்ஷன்குமார் இயக்கிய ‘ஒருத்தி’ என கவனத்தை ஈர்த்த திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும், சேரனின் ‘ஆட்டோ கிராஃப்’, ராமின் ‘கற்றது தமிழ்’ உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இ.வி. கணேஷ்பாபு

இவரது இயக்கத்தில் வெளியான ‘யமுனா’ அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றது.

இவர் தற்போது ‘பனங்காட்டு நரி’. ‘இன்னும் பேரு வெக்கல’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

பனங்காட்டு நரி படத்தில் நாயகனாக பிக்பாஸ் புகழ் பாடலாசிரியர் சிநேகன் நடிக்கிறார்.

சிநேகன்

இந்த நிலையில், ஹீரோயினாக நடிக்க ஓவியா ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஓவியா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.