புனே

க்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில்  ‘கோவிஷீல்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசி கண்டறிய உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.  இந்நிலையில் ஆக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ள தடுப்பூசி மனித சோதனையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்க உள்ளது.   இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித சோதனை அடுத்த மாதம் அதாவது ஆகஸ் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது.   இந்த சோதனையில் சுமார் 4000 முதல் 5000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.   இந்த சோதனை வயது முதிர்ந்தோர் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட உள்ளது.

இந்த மருந்துக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ எனப் பெயர் இடப்பட்டுள்ளது.   சீரம் இன்ஸ்டிடியூட் இந்த மருந்தைத் தயாரிக்க 20 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. முதல் கட்டமாக இறுதி அனுமதிக்கு முன்பு 30 கோடி டோஸ் மருந்து தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் முடிவு செய்துள்ளது.