டெல்லி: ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வரும்  கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரியில், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீரம் நிறுவன தலைவர்   பூனவல்லா தெரிவித்து உள்ளார்.
உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியா உள்பட உலக நாடுகள் மும்மும்ரமாக ஈடுபட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் தடுப்புசிகளை தயாரித்து இறுதிக்கட்டமாக மனிதர்களுக்கு சோதனை நடத்தி வருகிறது. இதில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியிலேயே சில நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில்,  பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகா  என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை மனிதர்களுக்கு சோதனை நடத்தி வருகிறது. ஏற்கனவே முதல் மற்றும் 2வது கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளன.தற்போது  3வது கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.  இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 3 ஆம் கட்டம் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
நமது நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஒடிசாவை சேர்ந்த  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute) நிறுவனத்துடன் இணைந்து 2 மற்றும் 3 கட்டம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோதனை முடிவுகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. டிசம்பரங்குள் சோதனை முடிவுகள் வெளியாகி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீரம் நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா கூறியதாவது,

ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள் உள்பட முன்களப்பணியாளர்கள், வயதானவர்களுக்கு பிப்ரவரி முதல் வழங்கப்பட உள்ளதாகவும், ஏப்ரல் முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது.  இந்த தடுப்பூசியின் விலை ரூ.1000 ஆக இருக்கும். ஒவ்வொருவரும்  கொரோனா தொற்று பரவலில் இருந்து விடுபட இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.