சென்னையில் பரிசோதிக்கப்படும் ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்து ‘கோவிஷீல்டு’

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ராஜெனிகாவும் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, ‘கோவிஷீல்டு’ சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்படுகிறது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சோதிக்கப்படவுள்ளதைப் பற்றி அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கேட்டபோது மேலும் விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர். இந்திய நிறுவனம் ‘பாரத் பயோடெக்’ கின் தயாரிப்பான ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து இன்னும் இரண்டாம் கட்ட சோதனையில் உளது என்பது குறிபிடத்தக்கது.

கோவிஷீல்டு மருந்தின் சோதனைகளுக்காக, 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இரண்டுபேருக்கும், அதேபோல, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் இந்த சோதனை நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த சோதனைகளை ஒருங்கிணைக்கின்றன.