ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு

அஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி, வயதானவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு புரோட்டீன்களான ஆன்டிபாடிகள் மற்றும் T-செல் வழி நோயெதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடங்கி, இறப்பு வரை வயதானவர்களே அதிக அபாயம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வில் பங்கேற்ற வயதானவர்கள் குழுவின் துணை குழுவினருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இந்த தடுப்பூசி 18-55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களில், பெரியவர்களில் “வலுவான நோயெதிர்ப்பு செயல்பாடுகளை” உருவாக்கியது என்பதைக் காட்டுகிறது.

ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசியானது கோவிட் -19 தடுப்பூசிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் சோதனைகளின் முடிவுகள் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், அஸ்ட்ராசெனிகா பி.எல்.சி அதன் சோதனைகளை அமெரிக்காவில் மீண்டும் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் இங்கிலாந்து சோதனையின்போது ஒரு பங்கேற்பாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான தகவலுக்குப் பிறகு, செப்டம்பர் மாதம் அஸ்ட்ராஜெனிகா தனது அமெரிக்க ஆய்வுகளை இடைநிறுத்திருந்தது. இந்த பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் பல வழங்கல் மற்றும் உற்பத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது விரைவில் தனது இறுதி கட்ட சோதனையின் ஆரம்பகட்ட முடிவுகளை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி இந்தியாவிலும் சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. புனேவை தளமாகக் கொண்ட சீரம் நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா, நோவாவாக்ஸ் மற்றும் கோடஜெனிக்ஸ் இன்க் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளைத் தயாரித்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் தடுப்பு ஊசி கொரோனா வைரஸ் புரதங்களை மட்டும் மனித உடலுக்குள் உருவாக்கி ஒரு தொற்று ஏற்பட்டது போன்ற சூழலை உருவாக்கும். மேலும் அந்த புரதங்களுக்கு எதிரான ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டும். இதன்மூலம் வைரஸ் தொற்று எளிதில் தடுக்கப்படும்.

You may have missed