இங்கிலாந்து:
க்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஃஜெனிகா மனித சோதனை இங்கிலாந்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளில் மிகவும் பயனுள்ளதாக கருதப்பட்ட பிரிட்டிஷ் தடுப்பூசியின் மனித சோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியான  அனாஸ்டிரஃஜெனிகவின் மூன்றாம் கட்ட மனித சோதனை உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்புமருந்து செலுத்தப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர். விளக்க முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே இந்த தடுப்பூசியின் சோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த தடுப்புமருந்து செலுத்தப்பட்ட 100 தன் ஆர்வலர்களுக்கு எந்த ஒரு எதிர் விளைவும் நேரிடாமல் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா(SII), உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த இந்திய நிறுவனமும் ஆஸ்ட்ராஃஜெனிகா மருந்தை தயாரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆஸ்ட்ராஃஜெனிகாவின் மனித சோதனைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்கிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப்  இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு மருந்தான ஆஸ்ட்ராஜெனிகாவின் மனித சோதனைகளை இடை நிறுத்தியதாக வெளியான அறிக்கைகள் குறித்து நாங்கள் (சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா) எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. இந்தியாவில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 100 தன்னார்வலர்கள் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளனர். இந்தியாவில் இந்த தடுப்புமருந்தின் மனித சோதனைகள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனியும் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.