Random image

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்

டில்லி :

காங்கிரஸ் கட்சியின் 2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு மற்றும் ஒருங்கினைப்பு குழு என்ற 3 குழுக்களை கடந்த மாதம் ராகுல்காந்தி அமைத்தார். இந்த குழுக்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அந்த குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கினைப்பாளர்கள் விபரங்களை ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். அதில்,‘‘ தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை குழு ஒருங்கினைப்பாளராக ராஜீவ் கவுடா, விளம்பர குழு தலைவராக ஆனந்த் சர்மா, விளம்பர குழு ஒருங்கினைப்பாளராக பவன் கேரா, தேர்தல் ஒருங்கினைப்பு குழு தலைவராக முன்னாள் அமைச்சர் ஏ.கே அந்தோனி, ஒருங்கினைப்பு குழுவின் ஒருங்கினைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.