டில்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளப.சிதம்பரம் ஜாமீன் கோரிஉச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற  நிலையில், விசாரணை நாளையும் தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கடந்த மாதம் (ஆகஸ்டு) 21-ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோ பணபரிமாற்றம் நடந்த விவகாரத்தை அமலாக்கப்பிரிவும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவு முயன்று வருகிறது.

ஏற்கனவே ஜாமின் கோரி ப.சிதம்பரத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் 6வது நீதிமன்றத்தில் 4வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டத.

வழக்கை நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, ஹிரிஷிகேஷ் அமர்வு விசாரித்தது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர். விசாரணையைத் தொடர்ந்து , வழக்கின் விசாரணயை நாளைக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும் அப்போது சிபிஐ தரப்பில் வாதாடலாம் என்று அறிவித்தனர்.