அறுபதாயிரம் ரூபாய் ஊதியம் பெறுபவர் ஏழையா ? : ப சிதம்பரம்

டில்லி

றுபதாயிரம் ரூபாய் ஊதியம் பெறுபவர் ஏழைகளா ? என முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப சிதம்பரம் வினா எழுப்பி உள்ளார்.

மத்திய அரசு இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்த மசோதா ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள அனைத்து வகுப்பினருக்கும் 10% இட ஒதுக்கீடு அளிக்க அரசு திட்டமிட்டது. இந்த சட்டதிருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்துப் பிரிவினரும் கல்வி மற்றும் வேலை வாப்புகளில் 10% இட ஒதுக்கீடு பெற முடியும். இதற்கான ஆண்டு வருமானம் ஒரு குடும்பத்துக்கு ரூ. 8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். அஹ்த்டுடன் 5 ஏக்கர் வரை விளை நிலம் மற்றும் 1000 சதுர அடிக்கும் குறைவான குடியிருப்பில் வசிப்போருக்கு இந்த இட ஒதுக்கீடு உண்டு என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில், “இந்த பாஜக அரசின் சட்டப்படி 90% இந்திய மக்கள் ஏழைகளாம். அதாவது 125 கோடி இந்தியர்கள் ஏழைகளாம். அப்படி பார்த்தால் ரூ.60000 மாத ஊதியம் வாங்குபவரும் ஏழை, மாதம் ரூ.6000 ஊதியம் பெறுபவரும் ஏழை என ஆகிறது. இது எவ்வாறு உள்ளது? இந்த ஒதுக்கீடு ஏழையிலும் ஏழைக்கு என்றால் ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் மக்கள் எல்லோரும் ஏழைகள் என்பதை எவ்வாறு ஏற்க முடியும்?” என பதிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி