வெளிநாட்டில் சொத்துக்குவிப்பு: ப.சி. குடும்பத்தினர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்

சென்னை:

வெளிநாட்டில்  சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், அதுகுறித்த தகவலை  மறைத்ததாகவும் வருமான வரித்துறை சார்பில்  தொடரப்பட்ட வழக்கில், ப.சிதம்பரம் குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர்  அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல  வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அதுகுறித்து வருவமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்த நிலையிலும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் மனு அளித்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, 25ந்தேதி விசாரணைக்கு  ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது வழக்கு சார்பாக,   ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.

விசாரணையை தொடர்ந்து, வழக்கை  ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினத்தில் கார்த்திக் சிதம்பரத்தை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.