டில்லி:

த்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, திறந்து வைத்த பிரமாண்டமான டில்லி சிபிஐ அலுவலகத்தன் அறையில் நேற்று இரவு அவரே கைதியாக இருக்க நேர்ந்தது…. காலத்தின்  கட்டாயம் போலும்….

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றங்கள் மறுத்து விட்ட நிலையில், நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு ப.சிதம்பரத்தால் திறந்து வைக்கப்பட்ட டில்லி சிபிஐ தலைமை அலுவலகம்

டில்லியின் லோதி சாலையில் அமைந்துள்ள பிரமாண்டமான சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் நள்ளிரவு விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அங்குள்ள அறை ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டார். மோடி அரசின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் நேற்று இரவு அடைக்கப்பட்ட சிபிஐ கட்டிடம், ப.சிதம்பரத்தால் திறந்து வைக்கப்பட்டது .

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கடந்த 2011ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், 2011ம் ஆண்டு   ஜூன் மாதம் 30ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி முன்னிலை யில், தனது நிர்வாகத்தின்கீழ் இருந்த சிபிஐன் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இன்று  தான் திறந்துவைத்த அலுவலகத்தில் தானே கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே, கடந்த 2010ஆம் ஆண்டு சொராபுதீன் போலி என்கவுன்டர் விவகாரத்தில் அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று உள்துறை அமைச்சராக அமித்ஷா இருக்கும் நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அவர் திறந்து வைத்த கட்டித்திற்குள்ளே சிறை வைக்கப்பட்டதுதான்… காலத்தின் கோலம் போலும்….

காலச்சக்கரம் சுழன்றுகொண்டு இருப்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.