download
புதுடெல்லி: 
மிழகத்தைச் சேர்ந்த .சிதம்பரம், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் விரைவில் காலியாக   இருக்கிறது. . இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று, எதிர்ப்பு வேட்பாளர்கள் இல்லாத பெரும்பாலான மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.
அந்த வகையில், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பா.ஜ.க.வைச் சேர்ந்த பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே ஆகியோரும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவுத் எம்.பி.யும், காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் பட்டேலும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள்.
பீகாரில் இருந்து  உச்சநீதிமன்ற  மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்தியும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி, ஆளும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் பல்விந்தர் சிங் பந்தர் ஆகியோரும் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.