மும்பை

இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாதது இந்தியாவுக்கு பெரும் அவமானம் என ப சிதம்பரம் கூறி உள்ளார்.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தார்.   அவருடைய 100 ஆவது பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படவில்லை.   இது பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.  நேற்று நடைபெற்ற டாடா இலக்கியத் திருவிழாவில் ப சிதம்பரம் கலந்துக் கொண்டு பேசினார். இந்த நிகழ்வுக்கு ”இந்திராவின் நூற்றாண்டில் அவரை நினைவு கோருவோம்” என்னும் தலைப்பிடப்பட்டிருந்தது.

சிதம்பரம் தனது உரையில், “நமது நாட்டின் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை நமது நாடு கொண்டாடது அரசுக்கு பெரும் அவமானம்.  எனக்குத் தெரிந்து எந்த ஒரு மாநில அரசும் இதைக் கொண்டாடவில்லை.  இந்திரா காந்தி சில நேரங்களில் முழு வெற்றி அடைந்துள்ளார். ஆனால் அனைத்து விவகாரங்களிலும் அவர் வெற்றி அடையவில்லை.

தனது தவறுகளை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.  அவசரநிலை அறிவித்தது தவறு எனவும் அதை மீண்டும் செய்ய மாட்டேன் எனவும் மன்னிப்பு கேட்டவர் இந்திரா காந்தி.  காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் இந்த விழா கொண்ட்டடப்படவில்லை.  ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை ரஷ்ய நாடு கொண்டாட மறந்ததை இது நினைவூட்டுகிறது.

மோடி தான் ஆட்சிக்கு வரும் முன்பு கூறியவைகளை செயல் படுத்தாததால் காங்கிரஸ் அவரை எதிர்க்கிறது.  அவர் வேலை வாய்ப்பை அதிகரிப்பதாகச் சொன்னது, பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்துவதாக சொன்னது, எதுவும் நடக்கவில்லை.  அவர் ரூ,10 லட்சம் பெருமானமுள்ள துணிகளை விடுத்து இந்திய உடைகளை அணிய ஆரம்பித்தது மட்டுமே அவர் செய்துள்ள ஒரே சீர்திருத்தம்.   ஏழைகளுக்கு அவர் செய்த ஒரே நன்மை இதுதான் போல் உள்ளது.

இன்னமும் மோடி நாட்டுக்கு நன்மை செய்வார் என்னும் நம்பிக்கை நாட்டு மக்களில் பலரிடம் உள்ளது.   அவர் ஆனால் அந்த நம்பிக்கையை காப்பது போல தெரியவில்லை.  இனிமேலாவது அவர் வேலைவாய்ப்பை அதிகரிப்பாரா? ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் அவர் தேர்தலுக்கு முன் போடுவதாக வாக்களித்த ரூ15 லட்சத்தை செலுத்துவாரா?   இதுவரை இந்த அரசு தோல்வியைத் தான் தந்துள்ளது.  இன்னும் 15 மாதங்களுக்குள் முன்னேற்றம் அடைந்தால் தான் வெற்றியைத் தந்ததாக சொல்ல முடியும்” எனக் கூறி உள்ளார்.