பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்க முடியும் : ப சிதம்பரம்

டில்லி

ற்போதைய நிலையில் மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது மாற்றம் இல்லாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத அளவை எட்டி உள்ளது.  மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் எண்ணெய் தட்டுப்பாட்டாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதைக் குறைக்க வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம்,”கச்சா எண்ணெய் விலை அதிகம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.  மத்திய அரசு நினைத்தால் தற்போதைய கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 15 வரை குறைக்க முடியும்.  அத்துடன் கூடுதல் வரியான ரூ.10 விதித்துள்ளதையும் அரசு குறைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 வரை குறையும்” என தெரிவித்துள்ளார்.