கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டி மகனுக்கு ‘சீட்’ வாங்கினார்! ப.சிதம்பரம்மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

டில்லி:

னது கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டியே, தனது  மகனுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  ‘சீட்’ வாங்கினார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

நாடு முழுவதும் மக்களிடையே மோடி அரசுக்கு எதிராக மக்களிடையே பலத்த எதிர்ப்பு அலை இருந்தபோதும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மாபெரும் தோல்வி அடைந்தது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தார். அவருக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலத்த தோல்வி அடைந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 22 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பிரமாதமான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டது. அதில் விவசாயிகள் உள்பட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியதும் கொடுக்கப் பட்டிருந்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதுபோல ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரத்தின்போதும், அவருக்கு மக்கள் கொடுத்த வரவேற் பும் அளப்பறியாதது, இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி வெற்றிவாகை சூடும் என எதிர்பார்த்த நிலையில், பெரும் தோல்வி அடைந்தது  காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை யும், வருத்ததையும் ஏற்படுத்தியது.

மக்களவைத் தேர்தலில் கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை மட்டுமே  இந்தமுறை பெற முடிந்தது.  52 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதன் காரணமாக இந்த தடவையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும்,  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கர்நாடகா கார்கே, ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங்  உள்பட பலர் தோல்வியை சந்தித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அதுபோல இதுவரை தோல்வி காணாத பாரம்பரியம் மிக்க அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்ததும் அதிர்ச்சியை ஏற்படத்தியது.

இதையடுத்து, தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் தோல்வி  குறித்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.  மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.  இந்த கூட்டத்தின்போது, காங் கரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பி, ராஜினாமா கடிதத்தை கொடுத்து வெளியேற முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தியும்,  அவரது ராஜினாமா கடிதத்தை நிராகரித்ததாகவும் தகவல் வெளியாயின.

இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி மூத்த தலைவர்கள் சிலரை கடுமையாக தாக்கி பகிரங்கமாக பேசினார்.  வாரிசு அரசியலால்தான் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததாக குற்றம் சாட்டிய ராகுல் குறிப்பிட்ட சில மூத்த தலைவர்களை கடுமையாக சாடினார்.  இவர்களைப் போன்றவர்களால்தான் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

கூட்டத்தின்போது,  தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்த ராகுல்காந்தி காரிய கமிட்டி உறுப்பினர்களின் கேள்வி மற்றும் குற்றச்சாட்டுகளுக்கும் அவ்வப்பது பதிலடி கொடுத்தார்.  குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த  முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது கடுமையாக சாடியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்த லில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் கமல் நாத் ஆகியோரை குறிப்பிட்டு பேசியவர், இவர்கள்   தங்களின் மகன்களுக்கு எம்.பி.சீட் கேட்டு அதிகமான நெருக்கடி அளித்தார்கள் என்பதை பகிரங்கமாகவே பேசினார்.

ப.சிதம்பரத்தைப் பார்த்து, ” தனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று மிரட்டல் விடுத்தார்” என்றும் நேரடியாக குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற தலைவர்களுக்கு   கட்சியின் நலனைக் காட்டிலும் தங்களின் மகன்களின் நலன்மீது அதிக அக்கறை செலுத்தினார் கள், இவர்களின் வாரிசு அரசியல் காரணமாகவே காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது என்றும் சாடி உள்ளார்.

காரிய கமிட்டி கூட்டத்தில், ம.பி. காங்கிரஸ் தலைவர் ஜோதிர்தியா சிந்தியா பேசும்போது குறுக்கிட்டு ராகுல், மூத்த தலைவர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், சவுதிகார், பண மதிபிழப்பு, விவசாயிகள் பிரச்சினை போன்றவை குறித்து தான் பேசினேன். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அது குறித்து பேசவில்லை என்று சுட்டிக்காட்டிய ராகுல்,  தேர்தல் பிரசாரத்தின்போது, தான் எடுத்துவைத்த கருத்துக்களுக்கு எஎத்தனை தலைவர்கள்  எனக்கு ஆதரவாக இருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற ம.பி. சட்டமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அங்கு முதல்வர் பதவிக்கு ஜோதிர்தியா சிந்தியா, கமல்நாத் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. அப்போது, மூத்த தலைவர் கமல்நாத் தனக்கே முதல்வர் பதவி வேண்டும் என்று மிரட்டியே காரியம் சாதித்ததாக கூறப்பட்டது. அதுபோல, தற்போதும்  தனது மகனுக்கு லோக்சபா தேர்தலில் சீட் வாங்க காங்கிரஸ் தலைமையை வற்புறுத்தியதையும் ராகுல் வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

ராகுலின் கருத்தை  உறுதிப் படுத்தும் விதமாகவே  தமிழகத்தில்  காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டியல் மார்ச் மாதம் 23ந்தேதி  வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்க ளில் காங்கிரஸ் கட்சி போட்டி யிட்ட நிலையில்,  சிவகங்கை தவிர மற்ற தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டது. இதன் காரணமாக சலசலப்பு நிலவியது. சிவகங்கை தொகுதிரயை கேட்டு ப.சிதம்பரம் பிடிவாதம் பிடிப்பதாதால், அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல், ஒரு சில நாள் கழித்து ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராகுல்காந்தியின் கோபம், மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீதான அதிரடி குற்றச்சாட்டுக் கள் தலைநகர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  காங்கிரஸ் கட்சியில் உள்ள கட்சி பூசல் மூத்த தலைவர்களின் ஆக்கிரமிப்பு போன்றவை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி