நாளை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்கிறார் ப.சிதம்பரம்! கார்த்தி தகவல்

டெல்லி:

திகாரில் இருந்து ஜாமினில் விடுதலையான ப.சிதம்பரம், நாளை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்பார் என்று, கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

106நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, இன்று உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. இதையடுத்து, இன்று திகாரில் இருந்து சிதம்பரம் வெளியே வந்தார்.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம்,  நாளை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வார என்று தெரிவித்து உள்ளார்.