சென்னை: தமிழ்நாடு மின்மிகை மாநிம் என அதிமுக அமைச்சர்கள் பேசி வருவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல என்று மறுத்துள்ளதுடன், தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்பதுதான் மின்மிகை மாநிலம் என்று விளக்கம் அளித்துள்ளர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் அனல்பறந்து வருகிறது. அதிமுக ஆட்சியாளர்கள் தங்களது சாதனைகளை குறிப்பிட்டு பேசி வருகின்றனர். அப்போது, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின்வெட்டு இல்லை என்பதை சுட்டிக்காட்டி வருவதுடன், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ‘டடிவிட்டர்’ பக்கத்தில் காட்டமாக பதில் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது, 50 % வெளி்மாநிலங்களில் வாங்குகிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்? ்
மின் மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள்.அந்த நிலையில் தமிழ்நாடு் இல்லை என்பதே உண்மை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.