டில்லி

நாட்டின் தலைமைக்கு பொருளாதார விழிப்புணர்வு இல்லை எனில் நாட்டில் கடும் வீழ்ச்சி ஏற்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய பொருளாதார வல்லுநர்கள் மட்டுமின்றி சர்வதேச வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சரும் பொருளாதார நிபுணருமான ப சிதிம்பரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

”கடந்த 2014ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலின் போது மோடி நமது பொருளாதாரம் பற்றி எதையும் யோசிக்காமல் பல விமர்சனங்கள் செய்தார். நான் அப்போது மோடியின் பொருளாதார அறிவை குறித்து ஒரு தபால் தலையின் பின்னால் எழுதி விடலாம் என குறிப்பிட்டேன். அது உண்மையான கருத்து என்றாலும் மோடி அதற்காக என்னை என்றும் மன்னிக்க மட்டார் என்படி நான் அறிவேன். இப்போது நான் சொன்னது சரி என்பதை காலம் நிரூபித்து விட்டது.

கடந்த 5 வருடங்களாக அரசின் பொருளாதார திட்டங்களில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன். இதற்கு முக்கிய காரணங்கள்
1. பிரதமருக்கு நுண் பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை அல்லது அதை தெரிந்துக் கொள்ள விரும்பாமை
2. நிதி அமைச்சரால் வணிகம், வர்த்தகம், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையளர்களை கையாள்வதை குறித்து ஒன்றும் அறியாத நிலை.
3. அதிகாரிகலைமுழுமையாக நம்பி பொருளாதாரம் குறித்த அரசின் தவறாஅன நடவடிக்கைகள்

ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதற்கும் இந்தியாவை நிர்வகிப்பதற்கும் வேறுபாடு உண்டு. முதல்வருக்கு அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட பலவற்றை தெரிந்துக் கொள்ள தேவை இளை. அவரை பொறுத்த வரை மாநிலத்தின் வரவு செலவை சரியாக நிர்வகித்தால் போதுமானதாகும். மத்திய அரசின் உதவியை சரியான நேரத்தில் பெற்றால் போதுமானது. இதனால் அவர்களுக்கு அதிகம் கல்வி அறிவு இல்லை என்றாலும் நிர்வகிக்க முடியும்.

ஆனால் இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்வகிப்பது வேறு விதமாகும். பல வெற்றி பெற்ற முதல்வர்கள் நிதி அமைச்சராக தோல்வி அடைந்துள்ளனர். அதற்கு மாறாக மன்மோகன்சிங் போன்றோர் அரசியல் அனுபவம் இல்லாமலே பிரதமராகவும் வெற்றிகரமான நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். தாராளமயமாக்கல் உள்ளிட்ட பல விவகாரங்கள் சிங் இல்லை எனில் நடந்திருக்காது.

பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம் நடக்கும்போது அதன் விளைவுகள் விரைவில் தெரிய வரும். இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நல்ல உதாரணம். பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு கூட படிக்காதவர்களும் இதை தவறென்று சுட்டிக் கட்டுகின்றனர். ஆனால் அதை மோடி அறியவில்லை.

இதன் தோல்விக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொறுப்பு ஏற்க முடியாது. ஆனால் இது தோல்வி என்பதையே மோடி ஒப்புக் கொள்ளவில்லை.

அடுத்தது தவறான நேரத்தில் தவறான விகிதத்தில் அமுலான ஜிஎஸ்டி ஆகும். இது அத்தனையும் சோதனை முறையில் நடத்தபட்டதால் பல தொழில்கள் நசிந்து போக நேரிட்டது.

அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் பொருளாதாரத் துறை ஐந்து வருடங்களுக்கான அரசின் செயல்பாடு அறிக்கையைஉருவாக்கி உள்ளது. இந்த அறிக்கையில் 2016-17 ஆன வருடம் அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு உள்நாட்டூற்பத்த் 8.2% லிருந்து 7.2% ஆகி தற்போது 7% ஆகி உள்ளது வரும் வருடம் அது 6.5% ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசின் பொருளாதார நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதை இது நிரூபிக்கும்” என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.