ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது?

--

டில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் பிரமுகருமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இன்னொரு புறம், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தகவல் பரவி வருகிறது.

ஏர்செல்-மேக்சிஸ் வர்த்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த முறைகேட்டில் கார்த்தி சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தி சிதம்பரம் நடத்திய ‘அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங்’ என்ற நிறுவனத்திற்கு, கடந்த 2006ம் ஆண்டு பங்குகள் அடிப்படையில் மிக அதிக லாபம் கிடைத்துள்ளது.. அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், மேக்சிஸ் நிறுவனம்- ஏர்செல் நிறுவனம் நடுவேயான சுமார் ரூ.4000 கோடி வர்த்தகத்திற்கு அனுமதி கொடுத்த நிலையில் இந்த அதிக லாபம் கிடைத்திருக்கிறது.

தவிர வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின், பங்குதாரரான துவாரகநாதன் மற்றும் கார்த்தி சிதம்பரம் நிறுவனங்கள் இடையே நடந்த பண பரிவர்த்தனைகளையும் அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது.

சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்
சிதம்பரம் – கார்த்தி சிதம்பரம்

கடந்த டிசம்பர் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்  அதிரடி ரெய்டு நடத்தினார்கள்.

இதற்கிடையே   டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு, மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியது. எனினும், அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில்தான் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தவிட்டதாகவும், செய்வதற்கான முயற்சியில் இருப்பதாகவும் இருவேறு வித தகவல்கள் பரவி வருகின்றன.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.