சிந்து – ஒகுஹாரா

கிளாஸ்கோ

ஸ்காட்லாந்தில் நடக்கும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது.   இதில் அரை இறுதிக்கு செய்னா, சிந்து ஆகிய இருவரும் முன்னேறினார்கள்,  ஆனால், செய்னா அரை இறுதியில் அதிர்ச்சி தோல்வியுற்றது ரசிகர்களை மனம் தளர வைத்தது.   ஆனால் அதற்கு மாறாக சிந்து அரை இறுதிப் போட்டியில் வென்று இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சிந்து அரை இறுதி போட்டியில்   உலகின் நம்பர் 10 ஆக இருக்கும் சென் யூஃபே உடன் மோதினார்.  21-13, 21-10 என்னும் செட் கணக்கில் அவரை வென்றார்.    இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கத்துக்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.   இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்னும் பெருமையையும் சிந்து அடைகிறார்.

இறுதிப் போட்டியில் சிந்துவுடன் மோதுபவர் ஒக்குஹாரா.   இவரை சிந்து கடந்த ஆறு போட்டிகளில் மூன்று முறை வென்றுள்ளார்.   ரசிகர்கள் அனைவரும் சிந்து இந்த முறை இறுதிப் போட்டியிலும் வெல்வார் என்னும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.