ஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குநர் பா.ரஞ்சித்…!

‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித்.

இவருக்கு அனிதா என்ற மனைவியும், மகிழினி என்ற மகளும் உள்ள நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இக்குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ஆர்யாவை நாயகனாக வைத்து குத்துச் சண்டையை மையப்படுத்திய சல்பேட்டா என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.