கலைத்தன்மையோடு வெகுசன மக்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவர் : பா.இரஞ்சித்

--

உடல் நலக் குறைவால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.

முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்திருப்பதாவது:

இயக்குநர் மகேந்திரன், எளிமைதான் உங்கள் இலக்கு. திரைவிமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகு சன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள். ஐயா உம் படைப்புகள் எப்போதும் வாழும.’ என கூறியுள்ளார்.

You may have missed