இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்….!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார். அவருக்கு வயது 63.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன். உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பா.ரஞ்சித்தின் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பா.ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.