காமுகர்களை பொள்ளாச்சி மண்ணிலேயே தூக்கிலிட வேண்டும் : பா.விஜய்

 

பொள்ளாசியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காமுகர்களை அரபு நாடுகளைப் போன்று பொள்ளாச்சி மண்ணிலேயே வைத்து தூக்கிலிட வேண்டும் என்று பாடகரும், நடிகருமான பா.விஜய் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல பதிவுகள் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், “அடிக்காதிங்க, லெக்கிங்க்ஸை கழட்டுர்றேன்” என்று அந்தப்பெண் அழும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குறது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெண்களை கொடூரமாக நாசம் செய்திருப்பது குலைநடுங்க வைக்கிறது. உடனடியாக இந்தக் கொடூரர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.