Random image

பாராட்டுகளை அள்ளும் ‘பாவ கதைகள்’ டிரெய்லர்…..!

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது.

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை, கௌரவக் கொலை, மூன்றாம் பாலினத்தவரிடம் காட்டப்படும் வேறுபாடு என்ன பல நிகழ்வுகளையும் இயக்குனர்கள் படமாக்கியுள்ளனர். தற்பொழுது பாவ கதைகள் டிரெய்லர் வெளியாகி உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே பாவ கதைகளின் முன்னோட்டத்தை இணையதளத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.