சென்னை:
எஸ்.ஆர்.எம்.  குழு தலைவர் பச்சமுத்து, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் பச்சமுத்து ஆஜர் படுத்தப்பட்டபோது, அவரது ஐ.ஜே.கே. கட்சி கொடியுடன் ஐம்பது பேருக்கு மேற்பட்டவர்கள் அங்கே கூடினார்.
“நாடு போற்றும் நல்லவர் பாரிவேந்தரை விடுதலை செய்”, “போடாதே போடாதே பொய்வழக்கு போடாதே” என்று அவர்கள் முழக்கமிட்டனர். அதோடு பா.ம.க. நிறுவனர் ராமதாஸையும், சன் டிவியையும் கடுமயைக விமர்சித்து முழக்கமிட்டனர்.
ijk-protest
பிறகு திடீரென அவர்கள் நீதிமன்றம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போகுக்வரத்து மிகுந்த பகுதி என்பதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் தலையிட்டு அவர்களை சாலையோரத்துக்கு விரட்டினர். ஆனாலும் அவர்கள் மீது நேற்று எந்தவித வழக்கும் பதியப்படவில்லை. இந்த நிலையில், சாலையிமறியலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன