நிவின் பாலியின் அடுத்த படம் படவேட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படவேட்டு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரை நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் “எனது அடுத்த படம் படவேட்டு என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை சன்னி வெய்ன் தயாரிக்கிறார். லிஜு கிருஷ்ணா இயக்குகிறார். மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்’ என்று நிவின் பாலி அதில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் லிஜு கிருஷ்ணாவுக்கு இது முதல் படம். தயாரிப்பாளர் சன்னி வைனுக்கும் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.