கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘படையப்பா’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும்.
தொலைக்காட்சிகளில் பலமுறை இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அறிந்து ரஜினி அனுமதியில்லாமல் எப்படி வெளியானது என்று விசாரிக்க ஆரம்பித்து அமேசான் போன்ற OTT தளங்களில் வெளியிட உரிமைக் கொடுக்கப்படவில்லை” என்று பேசி, நீக்கச் சொல்லியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அமேசான் தளத்திலிருந்து ‘படையப்பா’ படம் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நீக்கப்பட்டாலும், ‘அண்ணாமலை’ உள்ளிட்ட சில படங்கள் அமேசான் தளத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.