பாடி சரவணா: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 3 கிலோ தங்கத்திலான 4 வேல்கள் காணிக்கை!

திருச்செந்தூர்,

றுபடை வீடுகளில் ஒன்றாக அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகருக்கு சுமார் 3 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட 4 வேல்களை காணிக்கையாக செலுத்தினார் பாடி சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா.

சென்னையில் பிரபலமான வர்த்தக நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். கடந்த ஆண்டு அம்பத்தூர் அருகே பாடியில் தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் என்ற மிகப்பெரிய கடையை திறந்திருந்தது.

இந்த நிறுவனத்தின் தலைவர் சரவணா. இவர் தூத்துக்குடி மாவட்டம் பணிக்கநாடார் குடியிருப்பை சேர்ந்தவர். இவர்தி ருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு சுமார் 86லட்சம் மதிபிலான 3 கிலோ 50 கிராம் எடையுள்ள 4 தங்கவேல்களை காணிக்கையாக செலுத்தினார்.

முன்னதாக  தனது குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், 86 லட்சத்து45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தங்க கொலுசாயுதம், 2 வேல்கள், சேவல்கொடி ஆகியவற்றை காணிக்கையாக்கினார்.

கொலுசாயுதம் மூலவர் சுப்பிரமணியசாமிக்கும், ஒரு வேல் சுவாமி ஜெயந்திநாதருக்கும், ஒரு வேல் மற்றும் சேவல் கொடி சுவாமி சண்முகருக்கும் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதை கோவில்இணை ஆணையர் வரதராஜன், கோட்டை மணிகண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.