பங்காரு அடிகளார், மதுரை சின்னப்பிள்ளை, நடிகர் பிரபுதேவா உள்பட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

டில்லி:

மிழகத்தில் பங்காரு அடிகளார், மதுரை சின்னப்பிள்ளை, நடிகர் பிரபுதேவா உள்பட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் கலை, அறிவியில், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறை களில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை சின்னப்பிள்ளை –  பங்காருஅடிகளார் –  பிரபுதேவா

பத்ம விபூஷண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீஜன் பாய்,  மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் மனிபாய், பல்வான்ட் மொரேஹ்வர்,  வெளிநாட்டினர் இஸ்மாயில் ஒமர் குல்லா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண்

மலையாள நடிகர் மோகன்லால்,  கேரளாவை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

பத்ம ஸ்ரீ

கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர், நடன இயக்குனர் பிரபுதேவா, பின்னணி பாடகர் சங்கர் மகா தேவன், தமிழகத்தை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் (டிரான்ஸ்ஜென்டர்), மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,  மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94  பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.