ந்தியாவின் பழம்பெரும் பாடகர்களின் ஒருவரான 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் காலமானாதாவ அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பிரதமர் மோடி உள்ள மத்திய அமைச்சர் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

1930ம் ஆண்டு அரியானாவில் பிறந்த பண்டிட் ஜஸ்ராஜ். பிரபல பாடகராவார்.  இவரது இசை வாழ்க்கை எட்டு தசாப்தங்களாக நீடித்தது.

இவரை கவுரவப்படுத்தி கடந்த 2000 ஆம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், “ஜஸ்ராஜின் இழப்பு நாட்டின் கலாச்சாரத் துறையில் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.” ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும்  பிரதமர் மோடி,  மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பல பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.