தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு

தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு

ராச்சி

பாலிவுட் பிரபலநடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் அருணாசலம் முருகானந்தனின்  வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தித் திரைப்படம் பேட்மேன்.    இந்த திரைப்படத்தில் அக்‌ஷய் குமார்,  ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.    பால்கியின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

இந்தத் திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து பாகிஸ்தான் தணிக்கை வாரிய உறுப்பினர் இசாக் அகமது, “ பாகிஸ்தான் கலாசாராம், மற்றும் பாரம்பரியத்துக்கு எதிராக உள்ள திரைப்படங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.    அதனால் அக்‌ஷய் குமார் நடித்த பேட்மேன் திரைப்படத்துக்கு தடை விதித்துள்ளோம்.”  எனக் கூறி உள்ளனர்.    இந்த படத்தை பார்வையிடவே சில பாகிஸ்தான் தணிக்கை உறுப்பினர்கள் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமாக இருப்பது பற்றிய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் பல காட்சிகள் உள்ளன.