கில்லாடி உள்பட பல வெற்றிப்படங்களை கொடுத்த அக்ஷய் குமார் பேன் மேன் என்ற  புதிய படத்தில்ல் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பேட்மேன் என்ற படத்தின் கதைக்கருவானது, தமிழகத்தில் கோவை அருகே உள்ள கிராமப்பகுதியை  அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் கண்டுபிடிப்பு பற்றியதாகும்.

அருணாசலம் என்பவர் கிராமப்பகுதிகளில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளை தவிர்க்கும் விதத்தில் குறைந்த விலையில் சுகாதாரமான நாப்கினை தயாரித்து சாதனை படைத்தவர்.

வணிகமுறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் விலை அதிகமான நாப்கின்களை விட, மிக குறைந்த விலையில்  தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர்.

அதற்காக மேக் இந்தியா திட்டத்தின் வாயிலாக அவருக்கு  இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இவர் கணடுபிடித்துள்ள சிறிய நாப்கின் தயாரிக்கும்  இயந்திரம் தற்போது  23 மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன. வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில்  இயந்திரங்களின் உற்பத்தியை விரிவாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அக்ஷய் குமார் நடித்து வரும் பேட் மேன் படத்தில் இந்த நாப்கின் தயாரிப்பது குறித்தும், அந்த இயந்திர பயன்பாடு மற்றும் அதை சந்தைப்படுத்துத்தல், மற்றும் அந்த நாப்கின் வாயிலாக கிராமப் பெண்கள் சுகாதார வசதியுடன்  வாழ்க்கை தரம் உயர்வது குறித்து  உருவாகி உள்ளது.

அதே வேளையில், இந்த படத்தில், ஆனால், இதில் உண்மைக்கு முரணாக தமிழகத்தின் அருணாச்சலத்தின் பெயரை இருட்டடிப்பு செய்து, வேறு மாநிலத்தவரின் கண்டுபிடிப்பு போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதில் பலர்,  படத்தின் கதை எந்த மொழியிலும் இருக்கலாம். ஆனால் கதையின் கதாபாத்திரங்கள் அசல் கண்டு பிடிப்புக்கு உரியதை மாற்றாமல், அதன் உண்மை தன்மையோடு இருக்க வேண்டும் என்றும்,  தங்களின் விற்பனை சந்தைக்காக உண்மையை மறைப்பது அநீதி என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இது ஹாலிவுட்டின் “ஒயிட் வாஷிங்” போல இருப்பதாகவும் கூறப்படுகிறது.