டில்லி:

சர்ச்சைக்குரிய ‛பத்மாவதி’ பட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு முன் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி ஆஜரானார்.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய ‛பத்மாவதி’ என்ற திரைபடத்தை பிரபல பாலிவுட் இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாளை திரையிடப்பட உள்ள நிலையில் இத் திரைப்படம். ராஜஸ்தானின், ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று உண்மையை மறைத்து தவறாக சித்தரிக் கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ராஜபுத்ர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப் மாநில முதல்வர் கள், பல மத்திய அமைச் சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காததால், படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பத்தின் நிலைக்குழுவின் பார்வைக்கு சென்றது.

இதையடுத்து அனுராக் தாக்கூர் தலைமையிலான 30 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்ற குழுவினர் இயக்குனர் சய்சய்லீலா பன்சாலிக்கும், மத்திய திரைப்படதணிக்கை வாரியத்தின் தலைவர் பாரசூன் ஜோஷிக்கும் சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து பன்சாலி, ஜோஷி, மற்றும் மத்திய அரசின் தகவல் மற்றம் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடப்பதால் நாளை திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.